பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270. கோகர்னம் மகாபலநாதர்-கோகர்ணநாயகி சம்பந்தர் : 1. அப்பர் : 1. வழிபட்டநாள் : 7-3-59, 10-4-85. மைசூர் அரசாங்க எல்லையில் இருக்கின்றது. மேற்குக் கடற்கரை ஓரத்தில் கோயில் இருக்கிறது. மங்களூரிலிருந்து உடுப்பி, குண்டாப்பூர், கெங்குலி, பைந்துார், காஸர்கோடு, அன்னோவர் வழியாக, சுமார் 140 மைல் காரில் செல்ல வேண்டும். இடையில் ஏழு ஆறுகளைக் கடக்க வேண்டும். காரை,பெரியில் (Ferry)ஏற்றிச்செல்லவேண்டும். கடினமான பயணம். இப்பொழுது அந்த ஆறுகளுக்கெல்லாம் பாலம் கட்டப்பட்டு வருகிறது. சென்னை-பம்பாய் இருப்புப் பாதையிலுள்ள குண்டக்கல் இரயில் நிலையம் அடைந்து, அங்கிருந்து ஹூப்ளி இரயில் நிலையம் சேர்ந்து, ஹஅப்ளியிலிருந்து 105 மைல் சென்றால் இத்தலத்தை அடையலாம். ஹூப்ளியிலிருந்து 105 மைலும் ஒரேடியாகக் காரில் செல்லலாம். இடையே ஆறு குறுக்கிட்டுத் தடுப்பதில்லை. திருக்கோகர்ணம் பெரிய நகரம். முன்னே பம்பாய் அரசாங்கத்திலிருந்தது. இப்போது மைதுர் அரசாங்கத்தி லிருக்கிறது. அங்குப் பேசப்படும் மொழி கன்னடம். இராவணன் இலங்கையில் வைப்பதற்காகச் சிவபெருமானிடம் கயிலையில் பெற்றுவந்த இலிங்கத்தை இங்கே தரையில் வைக்குமாறு நேர்ந்ததால்,திரும்ப இராவணனால் அதைஎடுக்க முடியவில்லை. எனவேதான் மகாபலேசுவரர் என்று சுவாமிக்குப் பெயர். இராவணன் அசைத்துப்பிடுங்கும்போது பசுவின் காதுபோல் குழைந்து நீண்டுவிட்டபடியால் இத்தலம் கோகன்னம் என்று பெயர் பெற்றது. கோகன்னம் : பசுவின் காது.