பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

271. திருப்பருப்பதம் (பூர் சைலம் மல்லிகார்ச்சுனம்) பருப்பதநாதர்-பருப்பதநாயகி சம்பந்தர் 1. அப்பர் 1. சுந்தரர் 1. வழிபட்டநாள் : 15-11-64 1-2-66. ஆந்திர நாட்டில் உள்ள ஒரே தேவாரத் தலம் இது. இத்தலத்தை மூவரும் பாடியிருக்கின்றனர். கர்நூல் மாவட்டத்திலுள்ள நந்தியால் என்னும் இரயில் நிலையமுள்ள பெரிய நகரத்திலிருந்து பூரீ சைலம் சரியாக நூறு மைல். நந்தியாலிலிருந்து 32 மைலில் ஆத்மக்கர் என்னும் ஊர் இருக்கின்றது. அங்கிருந்து டொரானால் என்ற இடம் 37 கல் தொலைவு. டொரானாவிலிருந்து பூரீ சைலம் 31 மைல் மலைப்பாதை. சாலை நன்றாக இருக்கிறது. கோவில் வரை காரில் செல்லலாம். கோவில் மலையின் மீதுஇருக்கின்றது. கோவில் இருக்குமிடம் 1200 அடி உயரம். பூரீசைலத்தில் ஆந்திர அரசாங்கத்தார் நிறையச் சிர் திருத்தம் செய்து வருகின்றனர். வருபவர் தங்கும் மாளிகைகளும், சத்திரங்களும், விடுதிகளும் நிறைய இருக்கின்றன. இன்னும் கட்டிக் கொண்டிருக்கின்றார்கள். ஆந்திர நாட்டில் திருமால் தலத்திற்குப் பெயர் பெற்ற திருப்பதியைப் போல, சிவத் தலத்திற்கு பூரீசைலத்தை ஆக்க ஆந்திர அரசாங்கம் முயல்கின்றது. கோவில் ஓரளவு பெரியது. நன்றாகப் பராமரிக்கின்றார்கள். அம்மன் கோவில், சுவாமி கோவிலைவிடச் சிறிது உயரத்தில் இருக்கின்றது. பூரீசைலத்தைப் பற்றி மூவரும் பாடிய தேவாரம் முழுதையும் தமிழ் எழுத்தில் கோயிலில் சலவைக்கல்லில் பதித்திருக்கின்றார்கள். ஆந்திர நாட்டில் இதைக் காணும் போது மனத்திற்கு மிக மகிழ்ச்சியாக இருக்கின்றது.