பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 திருத்தலப்பயணம் பூரீசைலம் கோவிலுக்குச் சிறிது கிழே பாதாள கங்கை என்ற இடத்தில் அணைக்கட்டு ஒன்று கட்டிக்கொண்டிருக் கின்றார்கள். சென்னையினின்றும் பூரீசைலத்திற்கு நேரே காரிற் செல்ல லாம். சுமார் 300 மைல் அளவு இருக்கும். சம்பந்தர் சிர்கெழு சிறப்புஒவாச் செய்தவ நெறிவேண்டில், ஏர்கெழு மடநெஞ்சே! இரண்டுஉற மனம்வையேல் கார்கெழு நறுங்கொன்றைக் கடவுளது இடம்வகையால் பார்கெழு புகழ்ஓவாப் பருப்பதம் பரவுதுமே. அப்பர் அங்கண்மால் உடைய ராய ஐவரால் ஆட்டு ணாதே உங்கண்மால் திரவேண்டில் உள்ளத்தால் உள்ளி ஏத்தும் செங்கண்மால் பரவி ஏத்திச் சிவன் என நின்ற செல்வர், பைங்கண்வெள் ஏறு.அது ஏறிப் பருப்பத நோக்கி னாரே. சுந்தரர் மானும்மரை இனமும்மயில் இனமும்கலந்து எங்கும் தாமேமிக மேய்ந்துதடம் சுனைநீர்களைப் பருகிப் பூமாமரம் உரிஞ்சிப்பொழில் ஊடேசென்று புக்குத் தேமாம்பொழில் நீழல்துயில் சியர்ப்பத மலையே. 272, இந்திரநீலப்பருப்பதம் நீலாசலநாதர்-நீலாம்பிகை சம்பந்தர் : 1 வழிபட்டதாள் : இது வடநாட்டுத்தலங்கள் ஐந்தில் ஒன்று. இமயமலைச் சாரலில் உளது என்பர். இந்திரன் வழிபட்ட தலம் இது என்று கூறுவர்.