பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடநாடு 275 சம்பந்தர் குறைவி லார்மதி சூடி ஆடவண்டு அறையும் மாமலர்க் கொன்றை சென்னிசேர் இறைவன் இந்திர நீல பர்ப்பதத்து உறைவி னான்தனை ஓதி உய்ம்மினே. 273. அனேகதங்காபதம் அருண்மன்னேசுரர்-மனோன்மணி சம்பந்தர் : : வழிபட்டநாள் : இது வடநாட்டுத் தலங்கள் ஐந்தினுள் ஒன்று. ஹரித்துவாரத்திலிருந்து திருக்கேதாரம் செல்லும் வழியில், கேதாரத்திற்கு 11 மைல் முன்னே உள்ள கெளரி குண்டம் என்னும் இடமே அனேகதங்காபதம் என்று கூறப்பெறுகின்றது. சம்பந்தர் வெருவி வேழம்இரி யக்கதிர் முத்தொடு வெண்பளிங்கு உருவி வீழவயி ரம்கொழி யா.அகில் உந்திவெள் அருவி பாயும்அணி சாரல் அனேகதம் காவதம் மருவி வாழும்பெரு மான்கழல் சேர்வது வாய்மையே. 274 திருக்கேதாரம் கேதாரநாதர்-கேதாரநாயகி சம்பந்தர் : 1. சுந்தரர் 1. வழிபட்டநாள் : இமயமலைச் சாரலில் இருக்கின்றது. ஹரித்துவாரத்திலிருந்து 156 கல் தொலைவு.