பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 திருத்தலப்பயணம் கோவில் மே மாதம் திறக்கப் பெற்று, அக்டோபரில் மூடப் பெறுகிறது. ஆறு மாதம்தான் பூசை. ஏனைய ஆறு மாதங்களில் கோயில் பனிக்கட்டியால் மூடப் பெற்றிருக்கும். பிறகு, பனிக்கட்டியை உளியினால் உடைத்துத்தான் கதவைத் திறக்க வேண்டுமாம். சம்பந்தர் தொண்டர் அஞ்சு களிறும் அடக்கிச் சுரும்பார்மலர் இண்டை கட்டி வழிபாடு செய்யும்இடம் என்பரால்: வண்டு பாட மயில்ஆல மான்கன்று துள்ள.வரிக் கெண்டை பாயச் சுனைநீலம் மொட்டுஅலரும் கேதாரமே. சுந்தரர் வாள்ஓடிய தடம்கண்ணியர் வலையில்அழுந் தாதே, நாள்ஓடிய தமனார்தமர் நணுகாமுனம் நணுகி, ஆளாய் உய்ம்மின் அடிகட்குஇடம் அதுவோஎனில்இதுவே கிளோடுஅரவு அசைத்தான்இடம் கேதாரம்எ னிரே. சேக்கிழார் மன்னுதிருக் கேதாரம் வழிபட்டு மாமுனிவர் பன்னுடிகழ்ப் பசுபதிறே பாளத்தைப் பணிந்துஏத்தித் துன்னுசடைச் சங்கரனார் ஏற்றது நீர்க்கங்கை அன்னமலி அகல்துறைநீர் அருங்கரையின் மருங்கு அணைந்தார். 275. நொடித்தான்மலை (திருக்கயிலாயம்) கயிலாயநாதர்-பார்வதியம்மை சம்பந்தர் 2. அப்பர் 4. சுந்தரர் 1 வழிபட்டநாள் : இமய மலையின் உச்சியில் இருக்கின்றது. கட்டப்பட்ட கோவில் எதுவுமில்லை. மலையின் இயற்கையையே சிவலிங்க