பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடநாடு 277 வடிவமாகக் கொண்டு வணங்கப் பெறுகின்றது. அப்பர் சுவாமிகள் கயிலையை நோக்கிச் சென்றார். அப்பெருமான் முதிர்ச்சியை யறிந்த சிவபெருமான் அவரை மேலே செல்ல விடாமல் இடையே தடுத்து, திரு.ஐயாற்றில் கயிலைக் காட்சியைக் காட்டுவதாகக் கூறி, அவரை அங்குள்ள ஒரு நீர் நிலையில் முழுகச் செய்து, ஐயாற்றில் அவர் எழுந்திருக்கக் கயிலையை அங்குக் காட்டினார் என்று பெரிய புராணம் பேசும். சுந்தர மூர்த்திகள் உடம்போடு கயிலையை அடைந்தார் என்று சேக்கிழார் கூறுவார். ஆனால் அவர் திரும்ப இவ்வுலகத்திற்கு வர இல்லை. கயிலை சென்றவர்கள் திரும்பமாட்டார்கள் என்று பலரும் கருதுகின்றனர். எனினும் நாமறியச் சித்பவானந்த சுவாமிகள் முதலிய பெரியோர்கள் கயிலை சென்று திரும்பியதோடல்லாமல், அவர்கள் சென்று வந்த முறையை நூலில் வடித்துத் தரவும் நாம்கண்டுமகிழ்கின்றோம். சம்பந்தர் அந்தண்வரை வந்தபுனல் தந்ததிரை சந்தனமொடு உந்தி அகிலும், கந்தமலர் கொந்தினொடு மந்திபல சிந்துகயி லாய மலைமேல் எந்தைஅடி வந்து அணுகு சந்தமொடு செந்தமிழ் இசைந்த புகலிப் பந்தன்உரை சிந்தைசெய வந்தவினை நைந்துபர லோகம் எளிதே. அப்பர் வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி! மீளாமே ஆள்என்னைக் கொண்டாய் போற்றி! ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி! ஒவாத சத்தத்து ஒலியே போற்றி! ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி! ஆறுஅங்கம் நால்வேதம் ஆனாய் போற்றி! காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி! - கயிலை மலைாயனே! போற்றி! போற்றி! சுந்தரர் தான்.எனை முன்படைத் தான்.அதுஅ றிந்துதன் பொன்அடிக்கே நான்என பாடல்அந் தோநாயி னேனைப் பொருட்படுத்து வான்.எனை வந்துஎதிர்கொள்ள மத்தயானை அருள்புரிந்து ஊன் உயிர் வேறுசெய் தான்.நொடித் தான்மலை உத்தமனே.