பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 திருத்தலப்பயணம் மணிவாசகர் திருந்துவார் பொழில்து.ழ் திருப்பெருந் துறையில் செழுமலர்க் குருந்தம்மே வியசிர் இருந்தவாறு எண்ணி ஏசறா நினைந்திட்டு என்னுடை எம்பிரான் என்றுஎன்று அருந்தவா! நினைந்தே ஆதரித்து அழைத்தால் அலைகடல் அதனுளே நின்று பொருந்தவா. கயிலை புகுநெறி இதுகாண். போதராய், என்றுஅரு ளாயே. நக்கிரதேவ நாயனார் உருவு பலகொண்டு உணர்வரிதாய் நிற்கும் ஒருவன் ஒருபால் இருக்கை-மருவினிய பூக்கையில்கொண்டு எப்பொழுதும் புத்தேளிர்வந்துஇறைஞ்ச மாக்கயிலை என்னும் மலை. சேக்கிழார் நெற்றியில் கண்ணர் நால்பெரும் தோளர் நீறுஅணி மேனியர் அனேகர், பெற்றமேல் கொண்ட தம்பிரான் அடியார்: பிஞ்ஞகன் தன் அருள் பெறுவார், மற்றவர்க்கு எல்லாம் தலைமையாம் பணியும் மலர்க்கையில் சுரிகையும். பிரம்பும் கற்றைவார் சடையான் அருளினால் பெற்றான் காப்பதுஅக் கயிலைமால் வரைதான். வில்லிபுத்துர் ஆழ்வார் வலப்பாகம் செழும்பவளச் சோதி என்ன, வாள்.நீலச் சோதிஎன்ன மற்றைப் பாகம் கலப்பான திருமேனி அணிந்த நீற்றால் கதிர்முத்தின் சோதிஎண். மேனை ஈன்ற குலப்பாவை உடன்கயிலைக் குன்றில் வாழ்வில் குன்றுடையோன் திருக்கோலம்.குறிப்பால் உன்னி. புலப்பாடு புறம்பொசிய மார்பும் தோளும் பூரித்தான் உடல்புளகம் பாரித் தானே.