பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. கோயில் (திருஅரங்கம்) அரங்கநாதர்-அரங்கநாயகி வழிபட்டநாள் : 4-1-56, 7-1-66. 1. பெரியாழ்வார் 35. 2. ஆண்டாள் 10, 3. குலசேகராழ்வார் 31, 4. திருமழிசையாழ்வார் 14 5. தொண்டரடிப்பொடியாழ்வார் 55 கி. திருப்பாணாழ்வார் 10: 7. திருமங்கையாழ்வார் 73, 8. பொய்கையாழ்வார் 1: 9. பூதத்தாழ்வார் 4; 10. பேயாழ்வார் 2: 11. நம்மாழ்வார் 12. (ஆக 247) இரயில் நிலையம். திருச்சி நகரத்திலிருந்து வடக்கே மூன்று கல் தொலைவு. காவிரி-கொள்ளிடம் ஆகிய இரண்டு ஆறுகளுக்கு இடையே கோயில் இருக்கிறது. "அரங்கம் என்பது ஆற்றிடைக் குறையே" என்பது இலக்கணம். கோவில் மிகப் பெரியது. அரங்கநாதர் பள்ளி கொண்டிருக்கின்றார். வைணவ மரபுப்படி கிடந்த திருக்கோலம். அரங்கம் என்ற சொல்லுக்கு,அம்பலம்,சபை என்பது பொருள். சைவர்களுக்குத் தில்லையம்பலம் எப்படியோ.அத்தகையது வைணவர்களுக்குத் திருவரங்கம். "ஒன்றே மெய்ப்பொருள்" என்று உணர்ந்த ஞானிகள் இரண்டிற்கும் வேறுபாடு காணமாட்டார். திருமால் புகழ் பாடிய ஆழ்வார்கள் பன்னிருவருள், திருமாலைப் பாடாது. நம்மாழ்வாரை மட்டுமே பாடிய மதுர கவியாழ்வாரைத் தவிர, மற்றைய பதினொரு ஆழ்வார்களும் திருவரங்கத்தை வாய்குளிரப் பாடியிருக்கின்றார்கள். மொத்தம் ஆழ்வார்கள் பாடல் நாலாயிரத்துள் திருவரங்கத்தைப் பற்றி மட்டும் உள்ள பாடல்கள் 247. ஆழ்வார்களைத் தவிரப்பின்வந்த வைணவப் பெரியோர்கள் திருவரங்கத்தைப் பற்றி நிறையப் பாடியிருக்கின்றனர்.