பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 திருத்தலப்பயணம் அவருள்ளே தலைநின்றவர் திவ்வியகவி பிள்ளைப் பெருமாள் ஐயங்கார். திருவரங்கக் கலம்பகம். திருவரங்கத்து அந்தாதி, திருவரங்கத்து மாலை, பூரீரங்க நாயகர் ஊசல், திருநாமம், என்பன இவர் திருவரங்கத்தைப்பற்றிப்பாடிய நூல்கள். இவை தவிர அரங்கநாதனைப் பல தனிப் பாடல்களால் அலங்கரித்துப் பாடியுள்ளார். திருவரங்கக் கோவிலைப் பற்றிச் சொல்லும்போது, "செம்பொன் மதிள் ஏழுடுத்த திருவரங்கப் பெருங்கோயில்" FT sūr f_i frf#. தேர்த்திருநாளன்று தேரை இழுக்காமல் திண்ணையில் உறங்கிக் கிடந்த சோம்பேறிகளைப் பார்த்து பிள்ளைப் பெருமாள் ஐயங்கார், பின்வரும் அழகான வெண்பாவைப் பாடினார். ஒன்றும் தெரியாத ஊமர்காள்! தென்னரங்கர் இன்று திருத்தேரில் ஏறினார்-நின்று வடம்பிடிக்க வாருங்கள் வைகுந்த நாட்டில் இடம்பிடிக்க வேண்டும் எனின். பெரியநம்பி, பட்டர். வடக்குத் திருவீதிப்பிள்ளை, பிள்ளை லோகாச்சாரியார் ஆகியோர் இத்தலத்துப் பிறந்தனர். கவிச்சக்கரவர்த்தி கம்பர், தாம் பாடிய இணையற்ற இராம காதையை அரங்கேற்றிய இடம் திருவரங்கம் என்று கூறுவர். கோவிலுள் இருக்கின்ற ஒரு மண்டபத்தை இராமாயணம் அரங்கேற்றியமண்டபம் என்று இன்றும் கூறுகின்றனர். கம்பர் இராம காதையில், பால காண்டம், குலமுறை கிளத்துப் படலத்தில்.திருவரங்கநாதனை,அரங்கத்திற்பள்ளிகொள்ளச் செய்த பெருமை, இராமபிரானின் வழி முதல்வனாகிய இட்சுவாகு மன்னனைச் சேர்ந்தது என்று கூறுவார். அவ் அரிய பாடலைத் தொடர்ந்து வரும் பாடற் பகுதியில் காண்க பெரியாழ்வார் துப்புடை யாரை அடைவது எல்லாம் சோர்விடத் துத்துணை யாவர் என்றே. ஒப்பிலேன் ஆகிலும்தின்அ டைந்தேன் ஆனைக்கு நீஅருள் செய்த மையால்,