பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 திருத்தலப்பயணம் 2. கோழி (உறையூர்) அழகியமணவாளப்பெருமாள்-உறையூர்நாச்சியார் வழிபட்டநாள் : 15-3-56, 12-1-66 திருமங்கையாழ்வார் 1. திருச்சிக் கோட்டையிலிருந்து ஒரு கல் தொலைவு. நின்ற திருக்கோலம், வடக்கே திருமுக மண்டலம். திருமங்கை யாழ்வார் மங்களாசாசனம் திருப்பாணாழ்வார் பிறந்தருளிய தலம். திருப்பாணாழ்வாருக்கு இங்குச் சந்நிதி உண்டு. உறையூரில் திருமூக்கிச்சுரம் என்னும் தேவாரக் கோயில் இருக்கின்றது. உறையூர் ஒரு காலத்தில் சோழ அரசர்களுக்குத் தலைநகராக இருந்திருக்கிறது. திருமங்கையாழ்வார் கோழியும். கூடலும் கோயில் கொண்ட கோவ ரேஒப்பர் குன்றம்அேன்ன பாழியும், தோளும்ஒர் நான்கு உடையர் பண்டுஇவர் தம்மையும் கண்டுஅறியோம். வாழிய ரோlஇவர் வண்ணம் எண்ணில் மாகடல் போன்றுஉளர் கையில்வெய்ய ஆழிஒன்று ஏந்தி,ஒர் சங்கு பற்றி அச்சோ! ஒருவர் அழகியவா! 3. தஞ்சைமாமணிக்கோயில் நீலமேகப்பெருமாள்-செங்கமலவல்லி வழிபட்டநாள் : 29-1-57, 1-1-66, 1. திருமங்கையாழ்வார் 3 2. பூதத்தாழ்வார் 1 (ஆக 4) தஞ்சாவூரிலிருந்து திரு.ஐயாறு செல்லும் சாலையில் சுமார் இரண்டரைக்கல் அளவில் வெண்ணாற்றின் கரைமேல் இருக்