பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 287 கின்றது. இங்கே அடுத்தடுத்துமூன்று கோயில்கள் இருக்கின்றன. மூன்றுக்கும் சேர்த்தே மங்களாசாசனம் என்று சொல்லப் பெறுகிறது. 1. நீலமேகப் பெருமாள்-செங்கமலவல்லி இருந்ததிருக் கோலம். கிழக்கே திருமுக மண்டலம். 2. தஞ்சையாளி நகர் நரசிம்மப் பெருமாள்-தஞ்சை நாயகி. இருந்த திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம், 3. மணிகுன்றப்பெருமாள்-அம்புயவல்லி இருந்ததிருக் கோலம் கிழக்கே திருமுக மண்டலம். திருமங்கையாழ்வார் எம்பிரான், எந்தை என்னுடைச் சுற்றம், எனக்குஅரசு, என்னுடை வாழ்நாள், அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி அவர்உயிர் செகுத்தஎம் அண்ணல், வம்புஉலாம் சோலை மாமதிள் தஞ்சை மாமனிக் கோயிலே வணங்கி. நம்பிகாள்! உய்ய நான்கண்டு கொண்டேன் நாராய னாஎன்னும் நாமம். பூதத்தாழ்வார் தமர்உள்ளம், தஞ்சை, தலைஅரங்கம், தண்கால், தமர்உள்ளும் தண்பொருப்பு, வேலை-தமர்உள்ளும் மாமல்லை, கோவல், மதிள்குடந்தை என்பரே ஏவல்ல எந்தைக்கு இடம். 4. அன்பில் திருவடிவழகியநம்பி:அழகியவல்லி வழிபட்டநாள் : 16-3-56, 11-1-66, திருமழிசையாழ்வார் 1 லால்குடி இரயில் நிலையத்திற்குக் கிழக்கே 3 கல் தொலைவு. கிடந்த திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம்.