பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 艺89 6. திருவெள்ளறை பங்கயக்கண்ணன் - பங்கயச்செல்வி வழிபட்டநாள் : 16-3-58, 10-1-86 1. பெரியாழ்வார் 11 2. திருமங்கையாழ்வார் 13. (ஆக 24.) திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில் சிறிது சென்று, மணச்ச நல்லூர் கற்சாலையில் திரும்பவேண்டும். உத்தமர் கோவிலிலிருந்து 7 கல் தொலைவில் இருக்கிறது. பூரீரங்கத்திலிருந்து 10 கல் தொலைவு. நின்ற திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம். உய்யக் கொண்டார் பிறந்த தலம். பெரியாழ்வார் இன்பம் அதனை உயர்த்தாய்! இமையவர்க்கு என்றும் அரியாய்! கும்பக் களிறுஅட்ட கோவே! கொடும்கஞ்சன் நெஞ்சினில் கூற்றே! செம்பொன் மதில்வெள் ளறையாய்! செல்வத்தி னால்வளர் பிள்ளாய்! கம்பக் கபாலிகாண் அங்குக் கடிதுஓடிக் காப்பிட வாராய்! திருமங்கையாழ்வார் மஞ்சு லாமணி மாடங்கள் சூழ்திரு வெள்ளறை அதன்மேய, அஞ்ச னம்புரை யும்திரு உருவனை. ஆதியை. அமுதத்தை. நஞ்சுஉ லாவிய வேல்வல வன்.கலி கன்றிசொல் ஐயிரண்டும் எஞ்சல் இன்றிநின்று ஏத்தவல் லார்இமை யோர்க்குஅரசு ஆவர்களே.