பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 திருத்தலப்பயணம் 9. ஆதனுர் ஆண்டளக்கும்ஜயன்-பூரீரங்கநாயகி வழிபட்டநாள் : 1-2-57, 3-1-66, திருமங்கையாழ்வார் . சுவாமி மலையினின்றும் 2% மைல் தொலைவில் உள்ளது. புள்ளம் பூதங்குடியினின்றும் % கல் அளவு. கிடந்த திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம். திருமங்கையாழ்வார் அன்னவனை ஆதனூர் ஆண்டுஅளக்கும் ஐயனை, 10. திருஅழுந்தார் (தேரழுந்துளர்) ஆமருவியப்பன்-செங்கமலவல்லி வழிபட்டநாள் : 10-1-57, 13-10-85. திருமங்கையாழ்வார் 45. கும்பகோணம்-மாயூரம் இருப்புப் பாதையில் உள்ள தேரழுந்துார் என்னும் இரயில் நிலையத்தினின்றும் சுமார் 2 கல் தொலைவில் உள்ளது. கும்பகோணம்-மாயூரம் நெடுஞ்சாலையும் இரயில் நிலையத்தை ஒட்டியே செல்கின்றது. மாயூரத்திலிருந்து 7 மைல் தொலைவு. நின்ற திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம். கம்பர் பெருமான் பிறந்து அருளிய தலம் இது. ஆமருவியப்பன் கோவிலில் கம்பர் திருவுருவச் சிலையும், அவர் இல்லக் கிழத்தியின் உருவச் சிலையும் இருக்கின்றன. இக்கோவிலுக்குச் சிறிது துரத்தில் கம்பர் பிறந்து, வளர்ந்த இடம் என்று கருதப்பெறும் கம்பர் மேடு இருக்கிறது.