பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 593 கோவிலுக்கு நேரே கிழக்கில்தேவாரம்பெற்ற சிவன்கோவில் இருக்கிறது. இரண்டுகோவிலுக்கும் இடையில் சிறிது உயரமான ஓர் இடத்தில் சாலையருகில் சம்பந்த வினாயகர் என்ற பிள்ளையார் கோயில் இருக்கிறது. திருமங்கையாழ்வார் தேமருவு பொழிலிடத்து மலர்ந்த போதைத் தேன்அதனை வாய்மடுத்துஉன் பெடையும். நீயும், பூமருவி, இனிதுஅமர்ந்து பொறியில் ஆர்ந்த அறுகால சிறுவண்டே! தொழுதேன் உன்னை. ஆமருவி திரைமேய்த்த அமரர் கோமான் அணிஅழுந்துனர் நின்றானுக்கு இன்றே சென்று நீமருவி, அஞ்சாதே நின்று.ஓர் மாது நின்நயந்தாள் என்றுஇறையே இயம்பிக் கானே. 11. சிறுபுலியூர் அருமாகடல்-திருமாமகள் வழிபட்டநாள் : 12-7-57, 24-6-85. திருமங்கையாழ்வார் 10. மாயூரம்-காரைக்குடி இருப்புப் பாதையில் உள்ள மங்கை நல்லூர் இரயில் நிலையத்திலிருந்து மூன்று கல் தொலைவில் இருக்கிறது. பேரளத்திலிருந்தும் மூன்று மைல்தான். கிடந்த திருக்கோலம் தெற்கே திருமுக மண்டலம், திருமங்கையாழ்வார் வானார்மதி பொதியும்.சடை மழுவாளியொடு ஒருபால், தானாகிய தலைவன்.அவன் அமரர்க்கு,அதி பதியாம்: தேனார்பொழில் தழுவும்.சிறு புலியூர்ச்சல சயனத்து ஆனாயனது அடியல்லதுஒன்று அறியேன்.அடி யேனே.