பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.94 திருத்தலப்பயணம் 12. திருச்சேறை சாரநாதன்-சாரநாயகி. வழிபட்டநாள் : 2-9-56, 25-6-65. திருமங்கையாழ்வார் 13. கும்பகோணம்-திருவாரூர் நெடுஞ்சாலையில் கும்பகோணத் திணின்றும் ஒன்பது கல் தொலைவு. நின்ற திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம். இத்தலத்தில் தேவாரக் கோவிலும் இருக்கின்றது. திருமங்கையாழ்வார் தேராளும் வாள்.அரக்கன் தென்இலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழ. போராளும் சிலைஅதனால் பொருகணைகள் போக்குவித்தாய்' என்று. நாளும் தாராளும் வரைமார்பன், தண்சேறை எம்பெருமான் உம்பர் ஆளும் பேராளன். பேர்ஒதும் பெரியோரை ஒருகாலும் பிரிதி லேனே. 13. தலைச்சங்கநாண்மதியம் (தலைச்சங்காடு) நாண்மதியப்பெருமாள்-தலைச்சங்கநாச்சியார் வழிபட்டநாள் : 31-1-57, 19-10-65. திருமங்கையாழ்வார் 2. சிர்காழி-தரங்கம்பாடி நெடுஞ்சாலையில் 10 கல் தொலைவில் இருக்கிறது. மாயூரமிருந்து தரங்கம்பாடி செல்லும் நெடுஞ் சாலையில் உள்ள செம்பொன்னார் கோயில் என்னும் தேவாரத்