பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 295 தலத்தை அடைந்து, அங்கிருந்து 5 மைல் வடக்கே சென்றாலும் இத்தலத்தையடையலாம். காவிரியாற்றின் தென்கரையில் இக் கோயில் இருக்கிறது. நின்ற திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம். இக் கோயிலுக்குக் கிழக்கே தேவாரம் பெற்ற சிவன் கோவில் இருக்கிறது. திருமங்கையாழ்வார் &softrsoftтпғу? கண்ணபுரம் கடிகை கடிகமழும் தண்ணார் தாமரைசூழ் தலைச்சங்க மேல்திசையுள் விண்ணோர் நாள்மதியை விரிகின்ற வெஞ்சுடரை. கண்ணாரக் கண்டுகொண்டு களிக்கின்றது என்றுகொலோ? 14. திருக்குடந்தை (கும்பகோணம்) சாரங்கபாணிப்பெருமாள்-கோமளவல்லி வழிபட்டநாள் s 31-12-55. 26-5-65. 1. பெரியாழ்வார் 3, 2. ஆண்டாள் 1: 3. திருமழிசையாழ்வார் 7, 4. திருமங்கையாழ்வார் 25: 5. பூதத்தாழ்வார் 2, 6. பேயாழ்வார் 2: 7. நம்மாழ்வார் 11. (ஆக 51.) இரயில் நிலையம். கிடந்த திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம். கோயில் நடுவூருக்குள் இருக்கின்றது. கும்ப கோணத்தில் சக்கரபாணி கோயில், இராமசுவாமி கோயில் முதலிய பெருமாள் கோயில் நிறைய இருப்பினும் ஆழ்வார் மங்களா சாசனம் பெற்ற கோயில் இஃது ஒன்றே. கும்பகோணம் நகரத்தில் தேவாரம் பெற்ற சிவன் கோயில்கள் மூன்று இருக்கின்றன. பாடல்பெறாத கோவில்கள்