பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.96 திருத்தலப்பயணம் மிகப் பல இருக்கின்றன. கோயில் பெருத்தது கும்பகோணம்' என்பது பழமொழி. எங்கு பார்த்தாலும் குடந்தை நகருள் வானளாவிய கோபுரங்களைக் காணலாம். சாரங்கபாணி கோயில் பெரிது. அதன் இராசகோபுரம் மிகப் பெரிது. கும்பகோணம் கோயில் எல்லாவற்றுள்ளும்உயரமான கோபுரம் இக்கோபுரந்தான். இங்கே பள்ளி கொண்டிருக்கின்ற பெருமாளை'சாரங்கராசன்'என்றும்'ஆராஅமுதன்' என்றும் அழைப்பார்கள். திருமழிசையாழ்வார்,திருநாட்டுக்கு எழுந்தருளியது. அதாவது வீடுபேறடைந்தது இத்தலத்திலேயே. பெரியாழ்வார் குடங்கள் எடுத்துஏற விட்டுக் கூத்தாட வல்லஎம் கோவே! மடங்கொள் மதிமுகத் தாரை மால்செய்ய வல்லஎன் மைந்தா! இடந்திட்டு இரணியன் நெஞ்சை இருபிளவு ஆகமுன் கிண்டாய்! குடந்தைக் கிடந்தஎம் கோவே! குருக்கத்திப் பூச்சூட்ட வாராய்! ஆண்டாள் பால்ஆல் இலையில் துயில்கொண்ட பரமன் வலைப்பட் டிருந்தேனை, வேலால் துன்னம் பெய்தாற்போல் வேண்டிற்று எல்லாம் பேசாதே. கோலால் நிரைமேய்த்து ஆயனாய்க் குடந்தைக் கிடந்த குடமாடி, நீலார் தண்ணந் துழாய்கொண்டுஎன் நெறிமென் குழல்மேல் சூட்டீரே.