பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 29; நடந்தகால்கள் நொந்தவோ? நடுங்குஞாலம் ஏனமாய் இடந்தமெய்கு லுங்கவோ?வி லங்குமால்வ ரைச்சுரம் கடந்தகால்ப ரந்தகாவி ரிக்கரைக்கு டந்தையுள் கிடந்தவாறுஎ ழுந்திருந்து பேசுவாழி கேசனே! திருமங்கையாழ்வார் வாராளும் இளம்கொங்கை வண்ணம்வேறு ஆயினவாறு எண்ணாள் எண்ணில் பேராளன் பேரல்லால் பேசாள்:இப் பெண்பெற்றேன் என்செய் கேன்நான் தாராளன் தண்குடந்தை நகராளன்: ஐவர்க்குஆய் அமரில் உய்த்த தேராளன்: என்மகளைச் செய்தனகள் எங்ங்னம்நான் செப்பு கேனே! பூதத்தாழ்வார் எங்கள் பெருமான் இமையோர் தலைமகன் நீ. செங்கண் நெடுமால் திருமார்பா!-பொங்கு படமூக்கின் ஆயிரவாய்ப் பாம்பணைமேல் சேர்ந்தாய்! குடமூக்கில் கோயிலாக் கொண்டு, பேயாழ்வார் சேர்ந்த திருமால் கடல்குடந்தை வேங்கடம் நேர்ந்தஎன் சிந்தை நிறைவிசும்பு-வாய்ந்த மறைபா டகம்.அனந்தன் வண்துழாய்க் கண்ணி இறைபாடி ஆய இவை. நம்மாழ்வார் களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களைகண் மற்றுஇலேன் வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்த மாமாயா! தளரா உடலம் என்னது ஆவி சரிந்து போம்போது. இளையாது உனதாள் ஒருங்கப் பிடித்துப் போத இசைநீயே.