பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 திருத்தலப்பயணம் 15. கண்டீயூர் அரன்சாபம்திர்த்தபெருமாள் : கமலவல்லி வழிபட்டநாள் : 18-12-56, 2-1-66. திருமங்கையாழ்வார் 1. தஞ்சை-திருவையாறு நெடுஞ்சாலையில் திருவையாற்றுக்கு ஒரு கல் முன்னே இருக்கின்றது. சாலையின்மீது மேல்புறத்தில் கோயில் இருக்கின்றது. நின்ற திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம். எதிர்ப்புறத்தில் அட்ட வீரட்டங்களுள் ஒன்றாகிய தேவாரக் கோயில் இருக்கின்றது. திருமங்கையாழ்வார் பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர்மனை திரிதந்து உண்ணும் உண்டியான் சாபம் திர்த்த ஒருவன்ஊர். உலகம். ஏத்தும் கண்டியூர், அரங்கம், மெய்யம், கச்சி.பேர். மல்லை என்று மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்ய லாமே? 16. திருவிண்ணகர் (ஒப்பிலியப்பன்கோயில்) ஒப்பிலியப்பன்-பூமிதேவி வழிபட்டநாள் : 1-1-56, 17-10-65. 1. திருமங்கையாழ்வார் 34 2. பேயாழ்வார் 2. 3. நம்மாழ்வார். 11 (ஆக. 47.) கும்பகோணத்துக்குக் கிழக்கே 4 கல் தொலைவில் இருக்கிறது. திரு நாகேச்சுரம் இரயில் நிலையத்துக்கு அண்மையில்