பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 299 இருக்கிறது. கோவில் பெரிது. நின்ற திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம். இங்குள்ள கடவுளுக்கு ஒப்பிலியப்பன் என்று பெயர். ஒப்பில்லாத தந்தை என்னும் பொருளது. இதனைத் திரித்து இன்று உப்பிலியப்பன் கோயில் என்றழைக்கின்றார்கள். அதோடு இக்கோயிலுக்குள் உப்பிட்ட உணவுப் பொருள் எதையும் பயன்படுத்துவதில்லை என்றும்வைத்திருக்கிறார்கள். இதற்குச் சில கதைகளும் சொல்லுகிறார்கள். இவைகள் எல்லாம் சரியன்று. ஒப்பில்லாதவனை உப்பில்லாதவனாக்குவதில் என்ன சிறப்பு இருக்கிறது? "திருவிண்ணகர் சேர்ந்த அப்பன் தன்ஒப்பார்இல் அப்பன்" என நம்மாழ்வார் திருவாய்மொழிப் பாசுரத்தில் வரும் சொற்றொடர் ஒப்பிலியப்பன் என்பதற்குத் தக்க சான்றாகும். இக்கோயிலுக்குப் பக்கத்தில் திருநாகேச்சுரம் என்ற பாடல் பெற்ற சிவன் கோயில் இருக்கின்றது. திருமங்கையாழ்வார் அன்றுஆயர் குலமகளுக்கு அரையன் தன்னை, அலைகடலைக் கடைந்துஅடைத்த அம்மான்தன்னை, குன்றாத வலிஅரக்கர் கோனை மாளக் கொடும்சிலைவாய்ச் சரம்துரந்து. குலம்க ளைந்து வென்றானை. குன்றுஎடுத்த தோளி னானை, விரிதிரைநீர் விண்ணகரம் மருவி நாளும் நின்றானை, தண்குடந்தைக் கிடந்த மாலை. நெடியானை அடிநாயேன் நினைந்திட் டேனே. பேயாழ்வார் பண்டுஎல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம் கொண்டு.அங்கு உறைவார்க்குக் கோயில்போல்-வண்டு வளம்கிளரும் நீள்சோலை வண்பூங் கடிகை இளம்குமரன் தன்விண் ணகர்.