பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$60 திருத்தலப்பயணம் நம்மாழ்வார் நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமும்ஆய் வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப் பல்வகையும் பரந்தபெரு மான்என்னை ஆள்வானை, செல்வம்மல்கு குடித்திரு விண்ணகர்க் கண்டேனே. 17. திருக்கண்ணபுரம் செளரிராசப்பெருமாள் : கண்ணபுரநாயகி வழிபட்டநாள் : 5-5-56, 23-6-65. 1. பெரியாழ்வார் 1 2. ஆண்டாள் 1: 3. குலசேகராழ்வார் 1, 4. திருமங்கையாழ்வார் 104 5. நம்மாழ்வார் 11. (ஆக 128) மாயூரம்-காரைக்குடி இருப்புப்பாதையிலுள்ள நன்னிலம் என்னும் இரயில் நிலையத்திலிருந்து கிழக்கே 5 கல்தொலைவு. நான்காவது மைலில் திருப்புகலூர், சிவத்தலம் இருக்கிறது. அங்கே முடிகொண்டான் ஆற்றைப் பாலத்தின்மீது கடந்து தெற்கே செல்லுதல் வேண்டும். நின்ற திருக்கோலம். கிழக்கே திருமுகமண்டலம். இத் தலத்திற்குத் திவ்வியப் பிரபந்தத்தில் 128 பாசுரங்கள் இருக்கின்றன. திருமங்கையாழ்வார் மட்டும் நூற்றுக்குமேற்பட்ட பாடல்கள் இப்பதிக்குப் பாடியிருக்கின்றார். மங்கைமன்னன் நூற்றுக்குமேல் பாசுரம் பாடிய பதி இரண்டு. இன்னொன்று திருநறையூர். திவ்வியப்பிரபந்தப்பாடல்பெருக்கத்தில் இப்பதிமூன்றாவதாக நிற்கின்றது. திருமாலிருஞ்சோலையும் 128 பாசுரம் பெற்றிருக்கின்றது. முதலாவது திருவரங்கம். இரண்டாவது திருவேங்கடம். மூன்றாவது இடம் இத்திருப்பதிக்குக் கிடைத்ததால் இத்தலம் பெருஞ்சிறப்படைகிறது.