பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 திருத்தலப்பயணம் குலசேகராழ்வார் கொங்குமலி கரும்குழலாள் கோசலைதன் குலமதலாய்! தங்குபெரும் புகழ்ச்சனகன் திருமருகா! தாசரதி! கங்கையிலும் திர்த்தமலி கணபுரத்துஎன் கருமணியே! எங்கள்குலத்து இன்னமுதே! இராகவனே! தாலேலோ! திருமங்கையாழ்வார் தாராய தண்துளய வண்டுஉழுத வரைமார்பன்' என்கின் றாளால். போரானைக் கொம்புஒசித்த புள்பாகன் என்அம்மான்' என்கின் றாளால், ஆரானும் காண்மின்கள் அம்பவளம் வாய்அவனக்கு என்கின் றாளால், கார்வானம் நின்றதிருக் கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொல்லோ! நம்மாழ்வார் மானைநோக் கி.மடப் பின்னைதன் கேள்வனை. தேனை.வா. டாமலர் இட்டுநீர் இறைஞ்சுமின் வானைஉந் தும்மதிள் சூழ்திருக் கணபுரம் தான்நயந் தபெரு மான்சரண் ஆகுமே. 18. திருவாலிதிருநகரி வயலாலிமணவாளன்-அமுதகடவல்லி வழிபட்டநான் : 25-12-56, 14-10-65 1. குலசேகராழ்வார் : 1. 2. திருமங்கையாழ்வார் 41:(ஆக.42) சிர்காழியிலிருந்து தென்கிழக்கே ஆறு கல் தொலைவு. திருவாலி என்றும் திருநகரி என்றும் இரண்டு தலங்கள்