பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 303 இருக்கின்றன. இரண்டுக்குமிடையே இரண்டு கல் தொலைவு. திருநகரியில் மணவாளன் சந்நிதியும் திருமங்கையாழ்வார் சந்நிதியும் இருக்கின்றன. திருமங்கையாழ்வார் திருவுருவம் பேரழகோடு பொலிகின்றது. திருவாலியில் நரசிம்மப் பெருமாள் சந்நிதி இருக்கின்றது. திருமங்கையாழ்வார் பிறந்தருளிய குறையலுனர் எனும் தலம் இத் திருப்பதிக்கு அண்மையிலுளது. வீற்றிருந்த திருக்கோலம். மேற்கே திருமுகமண்டலம். இங்குள்ள திருமங்கையாழ்வார் தை அமாவாசை தோறும் எழுந்தருளி, குறையலூர் சென்று. அதற்கு அணித்தேயுள்ள மங்கை மடத்தில் தங்கி, திருநாங்கூர்திருப்பதி பன்னிரண்டிலும் கெருடசேவை கண்டருளி,மீண்டும் திருநகரியை அடைகின்றார். குலசேகராழ்வார் ஆலின்இலைப் பாலகனாய் அன்றுஉலகம் உண்டவனே! வாலியைக்கொன்று அரசுஇளைய வானரத்துக்கு அளித்தவனே! காலின்மணி கரைஅலைக்கும் கணபுரத்துஎன் கருமணியே! ஆலிநகர்க்கு அதிபதியே! அயோத்திமனே! தாலேலோ! திருமங்கையாழ்வார் நெஞ்சுருகிக் கண்பனிப்ப நிற்கும்.சோரும்: நெடிதுஉயிர்க்கும் உண்டுஅறியாள் உறக்கம்பேனாள்: நஞ்சுஅரவில் துயில்அமர்ந்த நம்பீ' என்னும் 'வம்பார்பூம் வயல்ஆலி மைந்தா' என்னும் அஞ்சிறைய புட்கொடியே ஆடும், பாடும் 'அணிஅரங்கம் ஆடுதுமோ தோழி!' என்னும் என்சிறகின் கிழ்அடங்காப் பெண்ணைப் பெற்றேன். இருநிலத்துஓர் பழிபடைத்தேக் ஏபா வம்மே!