பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 திருத்தலப்பயணம் 19. திருநாகை (நாகப்பட்டினம்) செளந்தரியராசப்பெருமாள்-செளந்தரியவல்லி வழிபட்டநாள் : 1-9-56, 12-3-65. திருமங்கையாழ்வார் : 1.0. இக்கோயில் நாகப்பட்டினம் நகரத்தில் இருக்கின்றது. இத்தலம் பழைய கடற்கரைப் பட்டினம். நின்ற திருக்கோலம். கிழக்கே திருமுகமண்டலம். இத்தலத்தில் நாகைக்காரோணம் என்ற தேவாரம்பெற்ற சிவன் கோயிலும் இருக்கின்றது. திருமங்கையாழ்வார் அன்னமும் கேழலும் மீனும்ஆய ஆதியை.நாகை அழகி யாரை கன்னிநன் மாமதிள் மங்கை வேந்தன் காமரு சிர்க்கலி கன்றி. குன்றா இன்னிசை யால்சொன்ன செஞ்சொல் மாலை ஏழும் இரண்டும்ஓ ரொன்றும் வல்லார் மன்னவ ராய்.உலகு ஆண்டு மீண்டும் வானவ ராய்மகிழ்வு எய்து வாரே. 20. திருநறையூர் (நாச்சியார்கோயில்) நம்பி-நம்பிக்கை நாச்சியார் வழிபட்டநாள் : 2-1-56, 25-6-65. திருமங்கையாழ்வார் : 1.10 கும்பகோணம்-குடவாசல் நெடுஞ்சாலையில் கும்பகோணத் திலிருத்து ஆறு கல் தொலைவு.