பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 305 பெரிய கோயில், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம். திருமங்கையாழ்வார் அதிகமான பாசுரங்கள் பாடியது இத்தலத்திற்குத்தான். நூற்றுக்கு மேற்பட்ட திருமங்கையாழ்வாரின் பாசுரம் பெற்ற திருப்பதி இரண்டு. ஒன்று திருக்கண்ணபுரம். இன்னொன்று திருநறையூர். திருக்கண்ணபுரத்துக்கு மங்கை மன்னன் பாடல் நூற்றுநான்கு. இத்தலத்திற்கு நூற்றுப்பத்து. திஷ்வியப்பிரபந்தப்பாடல்பெருக்கத்தில் இத்தலம் ஐந்தாவதாக நிற்கின்றது. 1. திருவரங்கம். 2. திருவேங்கடம். 3. திருக்கண்ணபுரம், 4. திருமாலிருஞ்சோலை. இத்தலத்தில் நறையூர்ச்சித்திச்சுரம் என்ற தேவாரம் பெற்ற சிவன் கோயில் இருக்கின்றது. திருமங்கையாழ்வார் கல்லார் மதில்துழி கடிஇலங்கைக் கார்அரக்கன் வல்ஆகம் கிள வரிவெஞ் சரம்துரந்த வில்லானை. செல்வ விபீடணற்கு வேறாக நல்லானை. நாடி நறையூரில் கண்டேனே. 21. நந்திபுரவிண்ணகரம் (நாதன்கோயில்) விண்ணகரப்பெருமாள்-சண்பகவல்லி வழிபட்டநாள் : 9-1-57, 15-1-66. திருமங்கையாழ்வார் : 1.0 கும்பகோணத்திலிருந்து தெற்கே 3 கல் தொலைவு. இருந்த திருக்கோலம். மேற்கே திருமுகமண்டலம்.