பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 307 23. தில்லைத்திருச்சித்திரகூடம் (சிதம்பரம்) கோவிந்தராசப்பெருமாள்-புண்டரீகவல்லி வழிபட்டநாள் : 25-12-55, 13-10-65 1. குலசேகராழ்வார்:11, 2. திருமங்கையாழ்வார் 21:(ஆக 32) சிதம்பரம் கூத்தப்பெருமான் கோயிலுக்குள் சந்நிதிக்கு நேராக இக்கோயில் இருக்கிறது. கிடந்த திருக்கோலம். கிழக்கே திருமுகமண்டலம். குலசேகராழ்வார் வலிவணக்கு வரைநெடுந்தோள் விராதைக் கொன்று. வண்தமிழ்மா முனிகொடுத்த வரிவில் வாங்கி, கலைவணக்கு நோக்குஅரக்கி மூக்கை நீக்கி, கரனோடு துண்டணன்தன் உயிரைவாங்கி, சிலைவணக்கி மான்மரிய எய்தான் தன்னைத் தில்லைநகர்த் திருச்சித்ர கூடம் தன்னுள் தலைவணக்கிக் கைகப்பி ஏத்த வல்லார் திரிதலால் தவம்உடைத்துஇத் தரணி தானே. திருமங்கையாழ்வார் காயோடு நீடு கனியுண்டு வீசு கடும்கால் நுகர்ந்து நெடுங்காலம், ஐந்து தியோடு நின்று தவம்செய்ய வேண்டா, திருமார்ப னைச்சிந் தையுள்வைத்தும் என்பீர். வாயோது வேதம் மல்கின்ற தொல்சீர் மறையாளர் நாளும் முறையால் வளர்த்த திஓங்க ஓங்கப் புகழ்ஓங்கு தில்லைத் திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.