பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 திருத்தலப்பயணம் 24. காழிச்சிராமவிண்ணகரம் (தாடாளன்-சந்நிதி) தாடாளன்-மட்டவிழும்குழலி வழிபட்டநாள் : 25-12-56, 15-10-65 திருமங்கையாழ்வார் சிர்காழி இரயில் நிலையத்துக்குக் கிழக்கே அரை மைலில் இருக்கின்றது. நின்ற திருக்கோலம். கிழக்கே திருமுகமண்டலம். திருமங்கையாழ்வார் பிறைதங்கு சடையானை வலத்தே வைத்துப் பிரமனைத்தன் உந்தியிலே தோற்றுவித்து. கறைதங்கு வேல்தடம்கண் திருவை மார்பில் கலந்தவன்தாள் அணைகிற்பீர்! கழுநீர் கூடித் துறைதங்கு கமலத்துத் துயின்று கைதைத் தோடாரும் பொதிசோற்றுச் சுண்ணம் நண்ணி, சிறைவண்டு களிபாடும் வயல்சூழ் காழிச் சிராம விண்ணகரே சேர்மின் நீரே. 25. கூடலூர் (ஆடுதுறைப்பெருமாள்கோயில்) வையம்காத்தபெருமாள்-பத்மாசனவல்லி வழிபட்டநாள் : 29-1-57, 16-1-66 திருமங்கையாழ்வார் 10. பாபநாசத்தினின்றும் ஐந்துகல் தொலைவு. திரு.ஐயாற்றி னின்றும் ஏழுகல் தொலைவு. நின்ற திருக்கோலம். கிழக்கே திருமுகமண்டலம்.