பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 3{}} திருமங்கையாழ்வார் பெருகு காதல் அடியேன் உள்ளம் உருகப் புகுந்த ஒருவர் ஊர்போல் அருகு கைதை மலர, கெண்டை குருகுஎன்று அஞ்சும் கூடல் ஊரே. 26. திருக்கண்ணங்குடி சியாமளமேனிப்பெருமாள்-அரவிந்தவல்லி வழிபட்டநாள் : 1-9-56, 21-8-85. திருமங்கையாழ்வார் 10. திருவாரூருக்குக் கிழக்கே ஏழு கல் தொலைவிலுள்ள கிழ் வேளுர் இரயில் நிலையத்திலிருந்து கிழக்கே இரண்டு கல் தொலைவு. நின்ற திருக்கோலம். கிழக்கே திருமுகமண்டலம். திருமங்கையாழ்வார் பன்னிய பாரம் பார்மகட்கு ஒழிய, பாரத மாபெரும் போரில். மன்னர்கள் மடிய மணிநெடும் திண்தேர் மைத்துனர்க்கு உய்த்தமா மாயன். துன்னுமா தவியும் சுரப்புனைப் பொழிலும் சூழ்ந்துளழு செண்பக மலர்வாய், தென்னஎன்று அளிகள் முரன்றுஇசை பாடும் திருக்கண்ணங் குடியுள் நின்றானே.