பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 341 மலகஞ் சுகத்தேற்கு அருள் அளித்த வாழ்வே! என்கண் மணியே!என் வருத்தம் தவிர்க்க வரும்குருவாம் வடிவே! ஞான மணிவிளக்கே! சலகந் தரம்போல் கருணைபொழி தடங்கண் திருவே! கண்ணமங்கைத் தாயே! சரணம் சரணம்.இது தருணம் கருணை தருவாயே. 28. கவித்தலம் கசேந்திரவரதர்-ரமாமணிவல்லி வழிபட்டநாள் : 29-1-57, 3-1-66. திருமழிசையாழ்வார் : ! பாபநாசம் இரயில் நிலையத்திலிருந்து வடக்கே இரண்டு கல் தொலைவு. கிடந்த திருக்கோலம். கிழக்கே திருமுகமண்டலம். திருமழிசையாழ்வார் கூற்றமும் சாரா கொடுவினையும் சாராதி மாற்றமும் சாரா வகையறிந்தேன்-ஆற்றங் கரைக்கிடக்கும் கண்ணன் கடல்கிடக்கம் மாயன் உரைக்கிடக்கும் உள்ளத்து எனக்கு. 29. திருவெள்ளியங்குடி கோலவில்இராமன்-மரகதவல்லி வழிபட்டநாள் : 23-5-57, 14-1-66 திருமங்கையாழ்வார் : 1.0 திருவிடைமருதுாரிலிருந்து 5 கல் தொலைவு. கிடந்த திருக்கோலம். கிழக்கே திருமுகமண்டலம்.