பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 திருத்தலப்பயணம் இத்தலத்திற்கு வடக்கே 1 கல் தொலைவில். திவ்வியப் பிரபந்தத்துக்குப் பேருரை கண்ட பெரியவாச்சான் பிள்ளை பிறந்தருளிய செங்கநல்லூர் என்னும் ஊர் இருக்கிறது. திருமங்கையாழ்வார் முடியுடை அமரர்க்கு இடர்செயும் அசுரர் தம்பெரு மானை அன்று அரியாய் மடியிடை வைத்து மார்வைமுன் கிண்ட மாயனார் மன்னிய கோயில், படியிடை மாடத்து அடியிடைத் துணில் பதித்தபன் மணிகளின் ஒளியால் விடிபகல் இரவுஎன்று அறிவுஅரி தாய திருவெள்ளி யங்குடி அதுவே. 30. மணிமாடக்கோயில் (திருநாங்கூர்) நந்தாவிளக்குப்பெருமாள்-புண்டரீகவல்லி வழிபட்டநாள் : 30-1-57, 14-10-65 திருமங்கையாழ்வார் : 1.2 சிர்காழியினின்றும் 5 கல் தொலைவு. திருவாலியிலிருந்து தெற்கே இரண்டு மைலில் இருக்கின்றது. திருநாங்கூர்த் தலங்கள் ஆறனுள் இது முதலாவது. இருந்த திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம். திருநாங்கூர்த் தலங்கள் ஆறு பின்வருவன : 1. மணிமாடக் கோயில் 2. வைகுந்த விண்ணகரம். 3. அரிமேய விண்ணகரம்.