பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 313 4. வண்புருடோத்தமம். 5. செம்பொன் செய் கோயில். 6. திருத்தெற்றியம்பலம். இவ்ஆறு கோயிலும் திருநாங்கூர் என்னும் சிறிய ஊருக்குள் இருக்கின்றன. இவ்வனைத்தும் திருமங்கையாழ்வார் மங்களா சாசனம் பெற்றவை. . திருமங்கையாழ்வார் துளையார் கருமென் குழல்ஆய்ச்சி யர்தம் துகில்வாரி யும்.சிற்றில் சிதைத்தும். முற்றா இளையார் விளையாட் டொடுகாதல் வெள்ளம் விளைவித்த அம்மான் இடம்.வேல் நெடுங்கண் முளைவாள் எயிற்று மடவார் பயிற்று மொழிகேட்டு இருந்து முதிராத இன்சொல் வளைவாய கிள்ளை மறைபாடு நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்குஎன் மனனே. 31. வைகுந்தவிண்ணகரம் வைகந்தநாதன்-வைகுந்தவல்லி வழிபட்டநாள் : 30-1-57, 14-10-65 திருமங்கையாழ்வார் : 1.0 இது நாங்கூர் ஆறு தலங்களுள் இரண்டாவது. இருந்த திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம். திருமங்கையாழ்வார் மின்அனைய நுண்மருங்குல் மெல்லியற்காய் இலங்கை வேந்தன்முடி ஒருபதும்தோள் இருபதும்போய் உதிர. தன்நிகரில் சிலைவளைத்துஅன்று இலங்கைபொடிசெய்த தடம்தோளன் மகிழ்ந்துஇனிது மருவிஉறை கோயில், செந்நெலொடு செங்கமலம் சேல்கயல்கள் வாளை செங்கழுநீ ரொடுமிடைந்து கழனிதிகழ்ந்து எங்கும் மன்னுடிகழ் வேதியர்கள் மலிவுஎய்து நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்கு.மட நெஞ்சே!