பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 திருத்தலப்பயணம் 32. அரிமேய விண்ணகரம் குடமாடு கூத்தப்பெருமாள்-அமுதகடவல்லி வழிபட்டநாள் : 30-1-57, 14-10-65. திருமங்கையாழ்வார் : 1.0 இது திருநாங்கூர் ஆறு தலங்களுள் மூன்றாவது. இருந்த திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம். திருமங்கையாழ்வார் திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழத் திவினைகள் போய்அகல அடியவர்கட்கு என்றும் அருள்நடந்துஇவ் ஏழுலகத்து அவர்பணிய வானோர் அமர்ந்துஏத்த இருந்தஇடம் பெரும்புகழ்வே தியர்வாழ் தரும்இடங்கள் மலர்கள்மிகு கைதைகள்செங் கழுநீர் தாமரைகள் தடங்கள்தொறும் இடங்கள்தொறும் திகழ அருவிடங்கள் பொழில்தழுவி எழில்திகழு நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே, 33. வண்புருடோத்தமம் புருடோத்தமப்பெருமாள்-புருடோத்தமநாயகி வழிபட்டநாள் : 30-1-57, 14-10-65. திருமங்கையாழ்வார் : 10 இது திருநாங்கூர் ஆறுதலங்களுள் நான்காவது. நின்ற திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம்.