பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 315 திருமங்கையாழ்வார் பருங்கை யானையின் கொம்பினைப் பறித்து.அதன் பாகனைச் சாடிப்புக்கு, ஒருங்க மல்லரைக் கொன்றுபின் கஞ்சனை உதைத்தவன் உறைகோயில், கரும்பின் ஊடுஉயர் சாலிகள் வரிளைதரு கழனியில் மலிவாவி மருங்குஎ லாம்பொழில் ஓங்கிய நாங்கூர் வண்புரு டோத்தமமே. 34. செம்பொன்செய்கோயில் பேரருளாளப்பெருமாள்-அல்லிமாமலர் நாச்சியார் வழிபட்டநாள் : 30-1-57, 14-10-65. திருமங்கையாழ்வார் : 1.0 இது திருநாங்கூர்க் கோவில் ஆறினுள் ஐந்தாவது, நின்ற திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம், திருமங்கையாழ்வார் களங்கனி வண்ணா! கண்ணனே! என்தன் கார்முகி லே'என நினைந்திட்டு. உளம்கனிந்து இருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்துள் ஊறிய தேனை. தெளிந்தநான் மறையோர் நாங்கைநன் நடுவுள் செம்பொன்செய் கோயிலின் உள்ளே வளங்கொள்பே ரின்பம் மன்னிதின் றானை வணங்கிநான் வாழ்ந்துஒழிந் தேனே.