பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 திருத்தலப்பயணம் 35. திருத்தெற்றி அம்பலம் செங்கண்மால்-செங்கமலவல்லி வழிபட்டநாள் : 30-1-57, 14-10-85 திருமங்கையாழ்வார் 10 இது திருநாங்கூர் ஆறாவது கோயில். கிடந்த திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம். திருமங்கையாழ்வார் மாற்றரசர் மணிமுடியும், திறலும். தேசும், மற்று.அவர்தம் காதலிமார் குழையும். தந்தை கால்தளையும் உடன்கழல வந்து தோன்றிக் கதநாகம் காத்துஅளித்த கண்ணர் கண்டீர்! நூற்று.இதழ்கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்து இளம்கமுகின் முதுபாளை பகுவாய் நண்டின் சேற்றளையில் வெண்முத்தம் சிந்து நாங்கூர்த் திருத்தெற்றி அம்பலத்துஎன் செங்கண் மாலே. 36. திருத்தேவனார்.தொகை (கிழைச்சாலை) மாதவப்பெருமாள்-கடல்மகள் வழிபட்டநாள் : 30-1-57, i-o-o: திருமங்கையாழ்வார் : 10 இத்தலம் திருநாங்கூருக்கு வடக்கே வயல்வழி இரண்டு கல் தொலைவு. அண்ணன் கோயிலுக்குக் கிழக்கே அரைக்கல் தொலைவு. நின்ற திருக்கோலம். மேற்கே திருமுக மண்டலம்.