பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 319 39. திருவெள்ளக்குளம் (அண்ணன் கோயில்) கண்ணன் நாராயணன்-பூவார் திருமகள் வழிபட்டநாள் : 30-1-57, 14-10-65 திருமங்கையாழ்வார் : 1.0 திருத்தேவனார் தொகை என்னும் தலத்திற்கு மேற்கே அரைக்கல் அளவு. நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம், திருமங்கையாழ்வார் வாராக மதாகிஇம் மண்ணை இடந்தாய்! நாராயணனே! நல்லவே தியர்நாங்கூர். சிரார் பொழில்துழி திருவெள்ளக் குளத்துள் ஆரா அமுதே அடியேற்கு அருளாயே. 40. பார்த்தன்பள்ளி தாமரையாள்கேள்வன்-தாமரைநாயகி வழிபட்டநாள் : 31-1-57, 15-10-65. திருமங்கையாழ்வார் : 10 சிர்காழியினின்றும் ஏழு கல்தொலைவு. திருநாங்கூரிலிருந்து இரண்டு கல் தொலைவு. - முப்பதாவது எண்ணிலிருந்து நாற்பது எண் முடியப் பதினொருதலங்களும் திருநாங்கூரைச் சேர்ந்ததலங்கள் என்று சொல்லப்பெறுகின்றன. இந்தத் தலங்களின் பதினொரு பெருமாள்களும் திருநகரிப் பெருமாளும் சேர்ந்து தை அமாவாசையில் பன்னிரண்டு கருட வாகனங்களில் வரும் காட்சியை ஒரே சமயத்தில் திருநாங்கூரில் காணலாம்.