பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/351

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாடு 325 பூதத்தாழ்வார் உணர்ந்தாய் மறைநான்கும் ஒதினாய் நீதி மணந்தாய் மலர்மகள்தோள் மாலே!-மணந்தாய்போய் வேய்இரும் சாரல் வியல்இரு ஞாலம்து.ழ் மாயிரும் சோலை மலை. பேயாழ்வார் (விண்ணகர் தலப்பாடல் பார்க்க) நம்மாழ்வார் திருமா லிருஞ்சோ லைமலையே! திருப்பாற் கடலே! என்தலையே! திருமால் வைகுந் தமே!தண் திருவேங் கடமே! எனதுஉடலே! அருமா மாயத்து எனதுஉயிரே! மனமே! வாக்கே! கருமமே! ஒருமா நொடியும் பிரியான்என் ஊழி முதல்வன் ஒருவனே. பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் நீர்ஆழி வண்ணனை. பாலாழி நாதனை. நின்மலனை. சிர்ஆழி அம்கைத் திருமகள் கேள்வனை. தெய்வப்புள்உஊர் கூர்ஆழி மாயனை, மால்அலங் காரனை.கொற்றவெய்யோன் ஒர்ஆழித் தேர்மறைத் தானை.எஞ் ஞான்றும்உரைநெஞ்சமே. அழகர் கலம்பகம் மணங்கமழ்பூ வையும்.மயிலும், தமாலக் காடும். வண்கிளியும். நீலவெற்பும், மடமான் கன்றும். இணங்கு.கட லும்,துகிரும். காரும். மின்னும், யமுனைஎனும் திருநதியும். எகினப் பேடும். கணங்குழைய கோசலை.தே வகி.ய சோதை. கண்மணியும். பாவையும்போல், கமல வீட்டின் அணங்குஅரசி உடன்குலவி ஆடீர்! ஊசல்! அலங்கார மாயவரே! ஆடீர்! ஊசல்!