பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 திருத்தலப்பயணம் 42. திருக்கோட்டியூர் செளமியநாராயணன்-திருமாமகள் வழிபட்டநாள் :5-4-58, 24-8-65. 1. பெரியாழ்வார் 22, 2. திருமழிசையாழ்வார் 1, 3. திருமங்கையாழ்வார் 13, 4. பூதத்தாழ்வார் 2: 5. பேயாழ்வார் . (ஆக 39) காரைக்குடியினின்றும்13 கல்தொலைவிலுள்ள திருப்புத்துார்த் தலத்தையடைந்து,அங்கிருந்து தெற்கே சிவகங்கைச்சாலையில் 6மைல்சென்றால் இத்தலத்தையடையலாம். கோவில்பெரியது: உயரமானது பல தளங்களைக் கொண்டது. அடித் தளத்தில் பள்ளிகொண்டபெருமாள். இரண்டாவது தளத்தில் செளமிய நாராயணப் பெருமாள் நின்ற திருக்கோலம். மூன்றாவது தளத்தில் வைகுண்டநாதன் இருந்த திருக்கோலம். வைகுண்டவாசலாகிய,கோவிலின் வடக்குக்கோபுர வாயிலில் இருமருங்கும் இரணியனோடு நரசிம்மமூர்த்தி போர் செய்யும் உருவம் ஒன்றும். இரணியனை மாய்க்கும் வடிவம் ஒன்றும் பெரிய சிலை உருவில் அருமையாக அமைந்திருப்பதைக் காணலாம். கோபுரம் தஞ்சைக் கோவில் கோபுரத்தின் மாதிரியில் பரவலாக அமைந்திருக்கிறது. இக்கோவிலின் கோபுரத்தின் உச்சியில் ஏறித்தான் உடையவர் என்னும் இராமாநுசர் உலகம் உய்ய மூல மந்திரத்தைச் சொல்லி அருளினார் என்பர். கோவிலுக்குள் நுழையும்போது முதன்முதலில் சிவபெருமான் சந்நிதி இருப்பதைக் காணலாம். பெரியாழ்வார் திவ்வியப் பிரபந்தத்திலேயே திருப் பல்லாண்டுக்கு அடுத்து, முதலாக வைத்திருக்கும் "வண்ண மாடங்கள் சூழ்திருக்கோட்டியூர்" என்ற பாடல் இத்தலத்திற்கே ஆகும். திருக்கோட்டியூர்நம்பி பிறந்தருளிய தலம் இது.