பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 திருத்தலப்பயணம் 43. திருமெய்யம் சத்தியகிரிநாதன் மெய்யப்பன் உய்யவந்தாள் வழிபட்டநாள் : 27-8-55, 4-9-85. திருமங்கையாழ்வார் : 1.0 காரைக்குடி-புதுக்கோட்டை நெடுங்சாலையில், காரைக்குடி யினின்றும் 16 கல் தொலைவு. புதுக்கோட்டையினின்றும் 12 கல். கோயில் மலையின் அடிவாரத்தில் இருக்கிறது. இங்கே, நின்ற திருக்கோலத்தில் ஒரு பெருமாளும். கிடந்த திருக்கோலத்தில் ஒரு பெருமாளும் இருக்கின்றனர். திருமங்கையாழ்வார் இத்தலத்திற்கு ஓர் தனிப் பதிகம் பாடவில்லை. எனினும் பிற தலங்களில் 10 பாடல்களில் திருமெய்யத்தைக் குறிப்பிடுகின்றார். இக்கோயிலின் அணித்தே இதைப்போலவே ஒர் குடைவரைச் சிவன் கோயில் இருக்கின்றது. ஆனால் அதற்குத் தேவாரம் இல்லை. திருமங்கையாழ்வார் பெண்ணாகிஇன் அமுதம் வஞ்சித் தானை. பிறைஎயிற்றுஅன்று அடல்அரியாய்ப்பெருகினானை. தண்ணார்ந்த வார்புனல்ஆழ் மெய்யம் என்னும் தடவரைமேல் கிடந்தானைப் பனங்கள் மேவி எண்ணானை. எண்ணிறந்த புகழி னானை. இலங்குஒளிசேர் அரவிந்தம் போன்று நீண்ட கண்ணானை. கண்ணாரக் கண்டு கொண்டேன் கடிபொழில்து.ழ் கடல்மல்லைத் தலசய னத்தே.