பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாடு 329 44. திருப்புல்லாணி (தர்ப்பசயனம்) கலியான சகந்நாதன்-கலியாணவல்லி வழிபட்டநாள் : 21-2-60, 17-9-85 திருமங்கையாழ்வார் : 21 இராமனாதபுரத்திலிருந்து தெற்கே 5 கல் தொலைவு. இக் கோயிலுக்குத் தெற்கே 3 கல் தொலைவில் கடல் இருக்கிறது. தின்ற திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம். பள்ளிகொண்ட பெருமாள் சந்நிதி ஒன்று தனியே இருக்கின்றது. இராமபிரான் இலங்கை செல்லக் கடலுக்கு அணைகட்ட வந்தபோது இங்கே புல்லில் படுத்திருந்தான் என்றும், அதனாலேயே இத்தலம் புல்லணை என்றும். தர்ப்ப சயனம் என்றும் பெயர் பெற்றது என்பர். புல்லணை புல்லாணியாக, மாறிவிட்டது. திருமங்கையாழ்வார் வேதமும், வேள்வியும். விண்ணும் இருசுடரும். ஆதியும் ஆனான் அருள்தந்த வாநமக்கு போதுஅலரும் புன்னைசூழ் புல்லாணி கைதொழுதேன் ஒதமும் நானும் உறங்காது இருந்தேனே. 45. திருத்தண்காலுணர் (திருத்தங்கால்) தண்கால் அப்பன்-அன்னநாயகி வழிபட்டநாள் : 1-8-58, 25-8-65. 1. திருமங்கையாழ்வார் 4, 2. பூதத்தாழ்வார் 1. (ஆக 5) விருதுநகர்-தென்காசி இருப்புப் பாதையிலுள்ள சிவகாசி இரயில் நிலையத்தினின்றும் 2 கல் தொலைவு, நின்ற திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம்,