பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 திருத்தலப்பயணம் இக்கோயிலை ஒட்டிச் சிவன் கோயில் ஒன்று இருக்கிறது. திருத்தண்காலூர் என்ற இத்தலம் வேறு திருத்தண்கா என்ற காஞ்சியைச் சேர்ந்த திருப்பதி வேறு. திருமங்கையாழ்வார் பொங்கார்மெல் இளம்கொங்கை பொன்னே பூப்பப் பொருகயல்கண் நீர் அரும்பப் போந்து நின்று செங்கால மடப்புறவம் பெடைக்குப் பேசும் சிறுகுரலுக்கு உடல்உருகிச் சிந்தித்து, ஆங்கே தண்காலும், தண்குடந்தை நகரும் பாடித் தண்கோவ லூர்பாடி ஆடக் கேட்டு. நங்காய்'நம் குடிக்குஇதுவோ நன்மை?' என்ன நிறையூரும் பாடுவாள் நவில்கின் றாளே! பூதத்தாழ்வார் (தஞ்சை மாமணிக் கோயில் தலப்பாடல் பார்க்க) 46. திருமோகூர் காளமேகப்பெருமாள்-மோகூர் வல்லிநாச்சியார் வழிபட்டநாள் : 8-4-56, 24-8-65. 1. திருமங்கையாழ்வார் 1, 2. நம்மாழ்வார் 11: (ஆக. 12) மதுரைக்குக் கிழக்கே மதுரை-காரைக்குடி நெடுஞ்சாலையில் மதுரையினின்றும் 7 கல் தொலைவிலுள்ள ஒத்தைக் கடை என்னும் சிற்றுாருக்கு அண்மையிலிருக்கிறது. நின்ற திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம். திருமங்கையாழ்வார் "சிராரும் மாலிருஞ் சோலை திருமோகூர்"