பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாடு 381 நம்மாழ்வார் தாள தாமரைத் தடமணி வயல்திரு மோகூர். நாளும் மேவிநன்கு அமர்ந்துநின்று அசுரரைத் தகர்க்கும் தோளும் நான்குடைச் சுரிகுழல், கமலக்கண், கனிவாய் காள மேகத்தை அன்றிமற்று ஒன்றுஇலம் கதியே. 47. திருக்கூடல் (தென்மதுரை) கூடலழகர்-வகுளவல்லிநாச்சியார் வழிபட்டநாள் : 1.0-4-56, 26-8-65. 1. திருமழிசையாழ்வார் 1 2. திருமங்கையாழ்வார் 1:(ஆக. 2) இது மதுரை நகரத்திற்குள் இருக்கின்றது. வீற்றிருந்த திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம். திருமழிசையாழ்வார் அழைப்பன் திருவேங் கடத்தானைக் காண இழைப்பன் திருக்கூடல் கூட-மழைப்பேர் அருவி மணிவரன்றி வந்துஇழிய, யானை வெருவி அரவுஒடுங்கும் வெற்பு. திருமங்கையாழ்வார் ("கோழி" தலப் பாடல் பார்க்க) த 48. பூரீவில்லிபுத்துார் ஆலிலைப்பள்ளியான்-ஆண்டாள் வழிபட்டநாள் : 1.3-7-58, 25-8-65. 1. பெரியாழ்வார் 1, 2. ஆண்டாள் 1. (ஆக. 2) விருதுநகர்-தென்காசி இருப்புப் பாதையிலுள்ள ஓர் இரயில் நிலையம்.