பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 திருத்தலப்பயணம் நின்ற திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம். இத்தலத்தில் ஆண்டாள்தான் தாயார். தனித் தாயார் சன்னிதி இல்லை. கடவுளைக் காதலித்துக் கனாக் கண்டு அவரையே மணந்து கொண்ட ஆண்டாள் பிறந்து அருளிய தலம் இது. ஆண்டாளை வளர்த்த தந்தை பெரியாழ்வார் பிறந்தருளியதும் இப்பதியிலேயே. கோதை பிறந்தஊர் கோவிந்தன் வாழும்ஊர் சோதி மணிமாடம் தோன்றும்ஊர்-நீதியால் நல்லபத்தர் வாழுமூர் நான்மறைகள் ஒதுமூர்: வில்லிபுத்துளர்; வேதக்கோன் ஊர். என்ற ஓர் அழகிய தனிப்பாடல் வெண்பாச் சிந்திக்கத் தக்கது. கோவில் பெரியது. கோபுரம் மிகப் பெரியது. இவ்வளவு உயரமான கோபுரம் வேறு எங்கும் இல்லை என்று சொல்லப் பெறுகிறது. திருவண்ணாமலைக் கோபுரம் இதனினும் உயரமானது என்ப. மகா பாரதத்தைத் தமிழ்ப் பாடலால் பாடிய வில்லிபுத்துர் ஆழ்வாரின் பெயர் இத்தலத்தைக் குறித்து எழுந்ததேயாகும். இத்தலத்தில் பழமையான "மடவார்வளாகம் " என்னும் பெயரிய சிவன் கோவில் ஒன்று இருக்கிறது. ஆனால் அத்தலத்திற்குத் தேவாரமில்லை. பெரியாழ்வார் மின் அனைய துண்இடையார் விரிகுழல்மேல் நுழைந்தவண்டு. இன்னிசைக்கும் வில்லிபுத்துர் இனிதுஅமர்ந்தாய்! உன்னைக்கண்டார் என்னநோன்பு நோற்றாள்கொலோ இவனைப்பெற்ற வயிறுடையாள். என்னும்வார்த்தை எய்துவித்த இருடீகேசா! முலைஉணாயே.