பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாடு 333 ஆண்டாள் மென்தடை அன்னம் பரந்து விளையாடும் வில்லிபுத் துனர்உறை வான்தன் பொன்அடி காண்டதோர் ஆசையி னால்என் பொருகயல் கண்இணை துஞ்சா இன் அடி சிலொடு பால்.அமுது ஊட்டி எடுத்தஎன் கோலக் கிளியை உன்னொடு தோழமை கொள்வன் குயிலே! உலகுஅளந் தான்வரக் கூவாய்! 49. திருக்குருகர் (ஆழ்ல் ர்திருநகரி) ஆதிநாதப்பெருமாள்-ஆதிநாதவல்லி வழிபட்டதாள் : 8-8-59, 5-9-65 நம்மாழ்வார் 11. நெல்லை-திருச்செந்துளர் நெடுஞ்சாலையில் இத்தலமிருக்கிறது. ஆழ்வார் திருநகரி ஓர் இரயில் நிலையம், இரயில் நிலையத்தினின்றும் கோயில் ஒரு கல் தொலைவிலிருக்கிறது. நின்ற திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம். கோயில் பெரியது. ஆழ்வாருள் எல்லாம் உரிமை பாராட்டி நம்மாழ்வார் என்று போற்றப் பெறும் "வேதம் தமிழ் செய்த" வித்தகராகிய சடகோபர் பிறந்த இடம். இத்தலத்தில் சடகோபர் திருவுருவம் வீற்றிருந்த திருக்கோலத்தில் எழிலே வடிவமாகத்திகழ்கின்றது. நம்மாழ்வார் பிறந்த காரணத்தாலேயே, இப்பதி ஆழ்வார் திருநகரி என்னும் பெயர் பெற்றது. இங்குள்ள பழம் பெரும் புளியமரம் நம்மாழ்வாரோடு தொடர்புடையது.