பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 திருத்தலப்பயணம் இதுவோ திருநகரி:ஈதோ பொருநை: இதுவோ பரமபதத்து எல்லை;-இதுவோதான். வேதம் பகர்ந்திட்ட மெய்ப்பொருளின் உட்பொருளை ஒதும் சடகோபன் ஊர். என்ற ஒருதனிப்பாடல் நம்மாழ்வார் சிறப்பை எடுத்துக்காட்டா நிற்கும். மணவாள மாமுனிகள் பிறந்தது இத்தலத்திலேயே. தண்பொருநை ஆற்றின் இரு கரைகளிலும் அடுத்தடுத்து ஒன்பது பெருமாள் கோயில்கள் இருக்கின்றன. இவற்றிற்கு நவதிருப்பதி என்று பெயர். முதல் திருப்பதி ஆழ்வார் திருநகரி. இத்தலம் தண்பொருநை ஆற்றின் தென்கரையில் இருக்கின்றது. நம்மாழ்வார் ஒடி ஒடிப் பல்பி -றப்பும் பிறந்துமற்று ஒர்தெய்வம் பாடி ஆடிப் பணிந்துபல் படிகால் வழியே றிக்கண்டீர் கூடி வானவர் ஏத்த நின்ற திருக்குரு கூர்.அதனுள் ஆடு புட்கொடி ஆதி மூர்த்திக்கு அடிமை புகுவதுமே. 50. தொலைவில்லிமங்கலம் (இரட்டைத்திருப்பதி) தேவபிரான் தாமரைக்கண்ணன் கருந்தடங்கண்ணி வழிபட்டநாள் : 10-8-59, 6-9-65 நம்மாழ்வார் 11 இங்கு அடுத்தடுத்து இரண்டு கோயில்கள் இருப்பதால் இரட்டைத் திருப்பதி என்று கூறப்பெறுகிறது. ஆழ்வார் திருநகரிஇரயில் நிலையத்திலிருந்து கிழக்கே2கல்தொலைவில்