பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாடு 335 தண்பொருநை ஆற்றின் வடகரையில் இருக்கிறது. ஒன்று நின்ற திருக்கோலம்..இன்னொன்று வீற்றிருந்ததிருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம். இத்தலங்கள் நவதிருப்பதியில் இரண்டாவதும் மூன்றாவதும் ஆம். நம்மாழ்வார் பின்னை கொல்?நில மாம கள்கொல்? திரும கள்கொல்? பிறந்திட்டாள். என்ன மாயம்கொ லோ?இ வள்நெடு மால்என் றேநின்று கூவுமால், முன்னி வந்தவன் நின்றுஇ ருந்துஉறை-யும்தொ லைவில்லி மங்கலம் சென்னி யால்வனங் கும்.அவ் ஊர்த்திரு நாமம் கேட்பது சிந்தையே. 51. திருப்புளிங்குடி காய்சினவேந்தன்-புளிங்குடிவல்லி வழிபட்டநாள் : 1.0-8-59, 6-9-65 நம்மாழ்வார் 12. பூரீவைகுண்டம் இரயில் நிலையத்தினின்றும் இரண்டு கல் தொலைவு. கிழக்கே திருமுக மண்டலம். கிடந்த திருக்கோலம். நவ திருப்பதிகளில் இது நான்காவது. இத்தலம் தண்பொருநை ஆற்றின் வடகரையில் இருக்கின்றது. நம்மாழ்வார் எம்இடர் கடிந்துஇங்கு என்னைஆள் வானே! இமையவர் தமக்கும்.ஆங்கு அணையாய்! செம்மடல் மலரும் தாமரைப் பழனத் தண்திருப் புளிங்குடிக் கிடந்தாய்: