பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/363

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாடு $37 53. பூரீவைகுந்தம் கள்ளப்பிரான்: வைகுந்தநாதன்-வைகுந்தவல்லி வழிபட்டதாள் : 16-8-59, 5-9-85 நம்மாழ்வார் 2 நெல்லை-திருச்செந்தூர் இருப்புப் பாதையில் ரீவைகுண்டம் இரயில் நிலையத்துக்கு வடக்கே % கல் தொலைவில், தண்பொருநை ஆற்றின் வடகரையில் இருக்கின்றது. இது நவ திருப்பதிகளுள் ஆறாவது தலம். இத் தலத்துக்குக் கிழக்கே மூன்று கல் தொலைவில் ஆற்றின் தென்கரைத் தலம் ஆழ்வார்திருநகரி. நின்ற திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம். சைவப் பெரியார், வடநாடுவரைச் சென்று சைவத்தையும் தமிழையும் நிலைநாட்டிய. குமரகுருபர அடிகள் பிறந்தருளியதும் இத்தலத்திலேயே. நம்மாழ்வார் எங்கள்கண் முகப்பே உலகர்கள் எல்லாம் இணையடி தொழுதுஎழுந்து இறைஞ்சி. தங்கள்.அன்பு ஆரத் தமதுசொல் வலத்தால் தலைத்தலைச் சிறந்துபூ சிப்ப, திங்கள்சேர் மாடத் திருப்புளிங் குடியாய்! திருவைகுந் தத்துள்ளாய்! தேவா! இங்கண்மா ஞாலத்து இதனுளும் ஒருநாள் இருந்திடாய், வீற்றுஇடம் கொண்டே 54. வரகுணமங்கை வெற்றி இருக்கைப்பெருமாள்-வரகுணவல்லி வழிபட்டநாள் : 10-8-59, 5-9-65. நம்மாழ்வார் 1 பூரீவைகுண்டத்திற்குக் கிழக்கே துரத்துக்குடி செல்லும் சாலையில் ஒரு கல் தொலைவு.