பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/364

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$38 திருத்தலப்பயணம் இருந்த திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம். நவ திருப்பதிகளுள் இது ஏழாவது தலம். இத்தலம் தண்பொருநை ஆற்றின் வடகரையில் இருக்கின்றது. நம்மாழ்வார் புளிங்குடிக் கிடந்து வரகுண மங்கை இருந்துவை குந்தத்துள் நின்று தெளிந்தனன் சிந்தை அகம்கழி யாதே என்னைஆள் வாய்எனக்கு அருளி நளிந்தசிர் உலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள்கூத் தாடிநின்று ஆர்ப்ப, பளிங்குநீர் முகிலின் பவளம்போல் கணிவாய் சிவப்பநீ காணவா ராயே. 55. திருக்குளந்தை (பெருங்குளம்) மாயக்கூத்தன்-குளந்தைவல்லி வழிபட்டநாள் : 1.0-8-59, 5-9-65. . நம்மாழ்வார் 1. பூரீவைகுண்டம் இரயில் நிலையத்திற்கு வடகிழக்கில் தொலைவு. நின்ற திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம். இது நவ திருப்பதிகளுள் எட்டாவது. இத்தலம் தண்பொருநை ஆற்றின் வடகரையில் இருக்கிறது. நம்மாழ்வார் கூடச்சென் றேன்.இனி என்கொ டுக்கேன்? கோல்வளை நெஞ்சத் தொடக்கம் எல்லாம், பாடற்றுஒழிய இழந்து வைகல் பல்வளை யார்முன் பரிச ழிந்தேன். மாடக் கொடிமதிள் தென்கு ளந்தை வண்குட பால்நின்ற மாயக் கூத்தன் ஆடல் பறவை உயர்த்த வெல்போர் ஆழி வலவனை ஆத ரித்தே,