பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/365

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாடு 339 56. திருக்கோளூர் வைத்தமாநிதி-கோளுர்வல்லி வழிபட்டதாள் : 10-8-59, 5-9-65. நம்மாழ்வார் 12. ஆழ்வார்திருநகரிக்குக் கிழக்கே 2 கல் தொலைவிலும் திருப்பேரைக்கு மேற்கே 2 கல் தொலைவிலும் இத்தலம் இருக்கின்றது. கிடந்த திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம். இது நவ திருப்பதிகளுள் ஒன்பதாவது. இத்தலம் தண் பொருநைத் தென்கரையில் இருக்கின்றது. இது நம்மாழ்வாரையே பாடிய மதுரகவி ஆழ்வார் பிறந்தருளிய இடம். நம்மாழ்வார் உண்ணும் சோறு பருகுநீர் தின்னும்வெற் றிலையும்எல்லாம் கண்ணன். எம்பெருமான் என்றுஎன் றேகண்கள் நீர்மல்கி. மண்ணினுள் அவன்சிர் வளம்மிக் கவனுர் வினவி, திண்ணம் என்இள மான்புகும் ஊர்திருக் கோளூரே. 57. சிரீவரமங்கை (வானமாமலை, நாங்குநேரி) வானமாமலைப்பெருமாள்-சிரீவரமங்கை வழிபட்டதா-ளள் : 8-8-59, 1-4-85. நம்மாழ்வார் 11. நெல்லை-கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் நெல்லைக்குத் தெற்கே 20 கல் தொலைவு. இருந்த திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம், நம்மாழ்வார் ஏன மாய்நிலம் கிண்டஎன் அப்பனே! கண்ணா! என்றும் என்னை ஆளுடை வானநாயகனே! மணிமா னிக்கச் சுடரே! தேன மாம்பொழில் தண்சீரீ வரமங் கலத்து அவர்கை தொழஉறை வான மாமலை யே!அடி யேன்தொழ வந்துஅருளே.