பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 திருத்தலப்பயணம் 58. திருக்குறுங்குடி வைணவநம்பி-குறுங்குடிவல்லி 1. பெரியாழ்வார் 1, 2. திருமழிசையாழ்வார் 1: 3. திருமங்கையாழ்வார் 25, 4. நம்மாழ்வார் 13. (ஆக 40) நாங்குனேரியிலிருந்து தென்மேற்கே 8 கல் தொலைவு. நின்ற திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம். இங்கே சியர் மடம் ஒன்று இருக்கிறது. பெரியாழ்வார் ("திருக்கண்ணபுரம்" தலப்பாடல் பார்க்க) திருமழிசையாழ்வர் கரண்டமாடு பொய்கையுள்க ரும்பனைப்பெ ரும்பழம் புரண்டுவீழ வாளைபாய்கு றுங்குடிநெ டுந்தகாய்! திரண்டதோள்இ ரணியன்சி னங்கொள்ஆகம் ஒன்றையும் இரண்டுகறு செய்து உகந்த சிங்கம்என்பது உன்னையே. திருமங்கையாழ்வார் எல்லியும் நன்பக லும்இருந்தே ஏசிலும் ஏசுக ஏந்திழையார் நல்லர் அவர் திறம் நாம்அறியோம்: நாண்.மடம்.அச்சம் நமக்குஇங்கு இல்லை; வல்லன சொல்லி மகிழ்வரேனும் மாமணி வண்ணரை நம்மறவோம்: கொல்லை வளர்.இள முல்லைபுல்கு குறுங்குடிக் கேஎன்னை உய்த்திடுமின். நம்மாழ்வார் எங்ங்னேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவதுநீர்? நங்கள்கோலத் திருக்கு றுங்குடி நம்பியை நான்கண்டபின், சங்கினோடும் நேமி யோடும் தாமரைக் கண்களொடும் செங்கனிவாய் ஒன்றி னோடும் செல்கின்றது என்நெஞ்சமே. வழிபட்டநாள் : 8-8-59, 1-4-65