பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 திருத்தலப்பயணம் நம்மாழ்வார் வருவார் செல்வார் வண்பரி சாரத்து இருந்த.என் திருவாழ் மார்வற்கு என்திறம் சொல்லார் செய்வதுஎன்? உருவார் சக்கரம் சங்கு சுமந்துஇங்கு உம்மோடு ஒருபாடு உழல்வான் ஓர் அடி யானும் உளன்என்றே. 61. திருக்காட்கரை காட்கரைஅப்பன்-பெருஞ்செல்வநாயகி வழிபட்டநாள் : 25-7-58, 5-4-65, நம்மாழ்வார் 11. சோரனூர்-எரணாகுளம் இருப்புப் பாதையிலுள்ள இடைப் பள்ளி இரயில் நிலையத்திற்கு 2 கல் தொலைவு. நின்ற திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம். நம்மாழ்வார் வாரிக்கொண்டு உன்னை விழுங்குவன் காணில்என்று ஆர்வுற்ற என்னை ஒழிய,என் னில்முன்னம் பாரித்து. தான்என்னை முற்றப் பருகினான். காரொக்கும் காட்கரை அப்பன் கடியனே. 62. திருமூழிக்களம் திருமூழிக்களத்தான்-மதுரவேணி வழிபட்டநாள் : 25-7-58, 5-4-65. 1. திருமங்கையாழ்வார் 3 2. நம்மாழ்வார் 11: (ஆக. 14) சோரனூர்-எரணாகுளம் இருப்புப்பாதையிலுள்ள அங்கமாலி இரயில் நிலையத்திலிருந்து கிழக்கே 5 கல் தொலைவு. நின்ற திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம்.